அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சின்னத்திரை நடிகரான சிபு சூரியன் ஜா தொடரில் நடித்திருந்தார். 1300 எபிசோடுகளை தாண்டி சூப்பர் ஹிட்டா இந்த தொடரில் ஹீரோவாக நடித்த சிபு சூரியனுக்கும், ஹீரோயின் நல்கார் ப்ரியங்காவுக்கும் ரசிகர்கள் அதிகம் கிடைத்தனர். டிஆர்பியில் ரோஜா தொடருக்கு அதிகம் டப் கொடுத்த சீரியல் என்றால் அது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தான். இரண்டும் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வந்தன. ஒருக்கட்டத்தில் புதிய சீரியல்கள் வரவால் இரண்டு சீரியல்களுக்கும் மவுசு குறைந்தது. இதனையடுத்து ரோஜா சீரியல் சில மாதங்களுக்கு முன் முடிந்தது. பாரதி கண்ணம்மாவுக்கும் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் எண்ட் கார்டு போட்டாகிவிட்டது.
இந்நிலையில், நடிகர் சிபு சூரியன் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 வில் ஹீரோவாக கமிட்டாகியுள்ள செய்தி ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பாரதி கண்ணம்மா சீசன் 2 புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் அதில் சிபு சூரியனை பார்த்த பலரும் 'அர்ஜூன் இஸ் பேக்' என கமெண்ட் செய்து வருகின்றனர். போட்டியாக இருந்த சேனலில், அதுவும் போட்டியாக இருந்த சீரியலின் இரண்டாம் பாகத்திலேயே சிபு சூரியன் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார் என பலரும் அவரை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீசன் வருகிற திங்கள் முதல் (பிப்ரவரி 6) ஒளிபரப்பாகவுள்ளது.