அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் 'நான் கடவுள் இல்லை' என்ற படத்தை இயக்கி முடிந்தார். பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியான அந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர் சின்னத்திரை தொடர்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ராதிகா சரத்குமாரின் ராடான் நிறுவனம் கலர்ஸ் தமிழ் சேனலுடன் இணைந்து புதிதாக சீரியல் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இயக்குநர் விசுவின் சூப்பர் ஹிட் திரைப்படமான 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தை 'கிழக்கு வாசல்' என்ற தலைப்பில் சீரியலாக தயாரிக்க வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில், விசு கதாபாத்திரத்தில் நடிக்க தான் எஸ்.ஏ.சந்திரசேகரை கமிட் செய்துள்ளனர். இந்த தொடரானது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.