ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கன்னடத்திலிருந்து தமிழுக்கு 'கனகவேல் காக்க' என்ற படம் மூலம் அறிமுகமானவர் ஹரிப்ரியா. “வல்லக்கோட்டை, முரண்,' சமீபத்தில் வெளிவந்த 'நான் மிருகமாய் மாற' உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் பல கன்னடப் படங்களிலும் சில தெலுங்குப் படங்களிலும் நடித்து வருபவர். அவருக்கும் கன்னட நடிகரான வசிஷ்ட சிம்ஹாவுக்கும் நேற்று மைசூரில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் கன்னட சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
வசிஷ்ட சிம்ஹா, கன்னடத்தில் பல படங்களில் நடித்தவர். தமிழில் 'கரை ஓரம்' என்ற படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் 'நரப்பா' மற்றும் 'ஓடேலா ரயில்வே ஸ்டேஷன்' படங்களில் நடித்துள்ளார். 'கேஜிஎப்' படத்தில் கமல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்தார்கள். சில வாரங்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது அவர்களது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் அதை அறிவித்தார்கள். திருமண புகைப்படங்களை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை, ஆனாலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.