அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிக்பாஸ் சீசன் 6 டைட்டில் பட்டத்தை அசீம் வென்றார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூ. 50 லட்சம் கிடைத்துள்ளது. அவர் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தான் டைட்டில் பட்டம் வென்றால் தனக்கு கிடைக்கும் பரிசுத் தொகையை வைத்து பல ஏழை மாணவர்களின் படிப்பிற்கு கட்டணம் செலுத்துவேன் என்று சொல்லியிருந்தார்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்துள்ள அசீம் தனது முதல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், 'நான் வெற்றி பெற்ற 50 லட்சத்தில் 25 லட்ச ரூபாயை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கொடுப்பதாக கூறியிருந்தேன். உலகின் தலை சிறந்த சொல் செயல். நான் என்னுடைய செயலை செயல் வடிவத்தில் காண்பிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அசீமின் வெற்றியை பொதுமக்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் அசீம் தற்போது ஏழை குழந்தைகளுக்கு உதவும் செயலை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர்.