அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வரும் 11ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், துணிவு படத்தின் புரொமோஷனுக்காக இயக்குநர் எச்.வினோத் பேட்டி அளித்து வருகிறார்.
துணிவு புரொமோஷன் நேர்காணலில் பேசிய எச்.வினோத், ''நேர்கொண்ட பார்வை படம் தொடங்குவதற்கு முன்பாகவே சதுரங்க வேட்டை படத்தின் பிரம்மாண்டமான வெர்ஷனை தான் அஜித்திடம் முதலில் கூறியிருந்தேன். அது ஹீரோ சப்ஜெக்ட்டாக இல்லாமல் காமன்மேன் கதையாக எழுதிருந்தேன். தற்போது அந்த கதையை தனுஷ் சாரிடம் சொன்ன பிறகு அவர் ஓக்கே சொல்லிவிட்டால் அது படமாக வரும்" என தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தனுஷ் - எச்.வினோத் கூட்டணி பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்தப் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அஜித்துக்காக எழுதப்பட்ட கதையில் தனுஷ் நடிக்கவுள்ளதாக வெளியான தகவல், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.