''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
2022ம் ஆண்டின் வருடக் கடைசி வெள்ளிக்கிழமை டிசம்பர் 30ம் தேதி வருகிறது. அன்றைய தினம் சுமார் 10 படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரையில் “ராங்கி, டிரைவர் ஜமுனா, செம்பி, ஓ மை கோஸ்ட், அருவா சண்ட, கடைசி காதல் கதை, டியர் டெத், காலேஜ் ரோடு” ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் கடைசி நேரத்தில் சில படங்கள் சேரலாம், சில படங்கள் விலகலாம்.
அந்தப் படங்களில் நான்கு படங்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள். த்ரிஷா நடித்துள்ள 'ராங்கி', ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'டிரைவர் ஜமுனா', கோவை சரளா நடித்துள்ள 'செம்பி', சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' ஆகிய படங்களில் கதாநாயகிகளுக்குத்தான் முக்கியத்துவம் அதிகம். அந்தப் படங்கள் அனைத்துமே பழி வாங்கும் கதைகள் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
'பொன்னியின் செல்வன்' படத்திற்குப் பிறகு த்ரிஷா நடித்து வர உள்ள படம் 'ராங்கி'. ஐஸ்வர்யா ராஜேஷ் தனி கதாநாயகியாக நடித்துள்ள 'டிரைலவர் ஜமுனா' படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் கோவை சரளா நடித்துள்ள 'செம்பி' படமும் மாறுபட்ட படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்னி லியோன் நடிக்கும் படம் என்பதே 'ஓ மை கோஸ்ட்' படத்திற்கு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதற்கு முன்பு கதாநாயகிகளுக்கு இடையில் இப்படி ஒரு போட்டி வெளியீடு வந்ததே கிடையாது.