அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
2000ம் ஆண்டில் என்னவளே என்ற படத்தில் அறிமுகமானவர் சினேகா. அதன்பிறகு ஆனந்தம், பம்மல் கே. சம்பந்தம், உன்னை நினைத்து, வசீகரா என எல்லா படங்களில் நடித்தார். திருமணத்திற்கு பிறகு வேலைக்காரன், பட்டாஸ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள சினேகா, தற்போது மலையாளத்தில் மம்முட்டி காவல்துறை அதிகாரியாக நடிக்கும் கிறிஸ்டோபர் என்ற படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார்.
அது குறித்த ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ள அப்படக்குழு, சினேகா பீனா மரியம் என்ற கேரக்டரில் நடிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நாயகிகளாக நடிக்கும் இந்த படத்தை உன்னிகிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படம் விஜிலென்ஸ் காவலரின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகிறது.