அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் வெற்றியோ தோல்வியோ ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு திட்டம் இரண்டு, பூமிகா என்ற இரண்டு தமிழ் படங்களும், தக் ஜெகதீஷ், ரிபப்ளிக் என்ற இரண்டு தெலுங்கு படங்கள் வெளிவந்தது. இந்த ஆண்டு அவர் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இண்டியன் கிச்சன், சொப்பனசுந்தரி, பர்ஹானா, உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.
இதுதவிர புலிமடா, அஜயிண்ட ரெண்டாம் மோசனம் என்ற மலையாள படங்களில் நடித்து வந்தார். தமிழ் இந்தியில் தயாராகும் மாணிக் படத்தில் நடித்து வருகிறார். இதுவல்லாமல் துருவ நட்சத்திரம், இடம் பொருள் ஏவல் படங்கள் கிடப்பில் கிடக்கிறது. இத்தனை படங்கள் இருந்தும் இந்த ஆண்டு இதுவரை ஒரு படங்கள் கூட வெளிவரவில்லை.
இந்த நிலையில் அவருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் ஆண்டு இறுதியில் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இண்டியன் கிச்சன் படங்கள் வெளிவருகிறது. இரண்டு படங்களுமே பலமுறை வெளியீடு அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்ட படங்கள். தி கிரேட் இண்டியன் கிச்சன் மலையாளத்தில் வெளிவந்த படத்தின் ரீமேக், ஆர்.கண்ணன் இயக்கி உள்ளார். டிரைவர் ஜமுனா, வத்திகுச்சி படத்தை இயக்கிய கிங்ஸ்லி இயக்கிய படம். இரண்டுமே ஹீரோயின் சப்ஜெக்ட் படங்கள். தி கிரேட் இண்டியன் கிச்சன் வருகிற 29ம் தேதியும், டிரைவர் ஜமுனா 30ம் தேதியும் வெளிவருகிறது.