யோகிபாபு மீது அதிரடி குற்றச்சாட்டு | துல்கர் சல்மான் படத்தில் மிஷ்கின் | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் | குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? | யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் |
சின்னத்திரை நடிகை அனு சுலாஷ் தற்போது 'பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்து வருகிறார். கடந்த 2017ம் வருடம் தனது காதலர் விக்கியை கரம்பிடித்த அனு சுலாஷ் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதற்காக 'பாண்டவர் இல்லம்' திரைக்கதையிலும் அவர் கர்ப்பமாக இருப்பது போல் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், 7 மாத கர்ப்பிணியான அனு சுலாஷுக்கு அவரது கணவர் விக்கி மட்டும் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இதுகுறித்து மனம் திறந்துள்ள அனு, 'நானும் எனது கணவரும் வளைகாப்பு நிகழ்வை சிம்பிளாக அழகாக இருக்க வேண்டும் என்று விரும்பினோம். சிறப்பான அந்த ஒரு நாளை முற்றிலும் தனிமையுடன் எங்கள் குழந்தையுடன் மட்டும் ஆனந்தமாக தழுவிக்கொள்ள விரும்பினோம். விக்கி முதன்முதலாக எனக்கு நலங்கு சடங்கு செய்தார். அது என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒன்றாக இருந்தது. என்னை புதுமணப்பெண் போல முகம் சிவக்க வைத்தது' என்று கூறியுள்ளார். அனுசுலாஷ் தனது வளைகாப்பு புகைப்படங்களை இண்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.