Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

நயன்தாராவுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியிட்ட டிடி!

21 டிச, 2022 - 11:59 IST
எழுத்தின் அளவு:
DD-released-photos-with-Nayanthara!

சின்னத்திரை தொகுப்பாளினியான திவ்யதர்ஷினிக்கு (டிடி) சினிமா நடிகைகளை காட்டிலும் அதிக நபர்கள் ரசிகர்களாக உள்ளனர். ‛காபி வித் டிடி' நிகழ்ச்சியில் பல திரைபிரபலங்களை நேர்காணல் செய்த டிடி அந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். தற்போது அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பெரிதாக கலந்து கொள்வதில்லை. இருப்பினும், பெரிய பட்ஜெட் படங்களுக்கு பெரிய ஸ்டார்களை நேர்காணல் செய்ய டிடி தான் இப்போதும் முதல் சாய்ஸாக இருக்கிறார்.

அந்த வகையில் கடைசியாக ஆர் ஆர் ஆர் படத்தின் புரோமோஷனுக்காக ராம்சரண், ராஜமவுலி, ஜூனியர் என்டிஆரை டிடி பேட்டி எடுத்திருந்தார். தற்போது கனெக்ட் படத்தின் புரமோஷனுக்காக நயன்தாராவை டிடி பேட்டி எடுத்துள்ளார். அந்தசமயம் திய்வதர்ஷினி நடிகை நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து, 'லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மகிழ்ச்சியான முகத்துடனும், மனநிறைவுடனும் இருந்தார். அவர் மிகவும் இணக்கத்துடன் தனது 20 ஆண்டுகால உழைப்பு குறித்து இந்த நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார். இன்ஸ்பைரிங் நபரான அவருடன் அமைந்த இந்த உரையாடல் மிகவும் அருமையாக இருந்தது' என்று கூறியுள்ளார். டிடி - நயன்தாரா காம்போவை விரைவில் திரையில் காண ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
வனிதாவின் கசின் இந்த பிரபல நடிகையா? 40 ஆண்டுகளுக்கு பின் தெரிய வந்த உண்மைவனிதாவின் கசின் இந்த பிரபல நடிகையா? 40 ... கணவர் மட்டும் போதும்! சீரியல் நடிகை அனுவின் சிம்பிளான வளைகாப்பு கணவர் மட்டும் போதும்! சீரியல் நடிகை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)