Advertisement

சிறப்புச்செய்திகள்

ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் | அஜித்தின் ‛குட் பேட் அக்லி' முதல் பார்வை வெளியீடு - எதிர்பாராததை எதிர்பாருங்கள் | விஜய், தனுஷை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா | தீபாவளியை குறிவைக்கும் கங்குவா படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் படத்தை வாங்கி ஏமாறாதீர்! பட வினியோக நிறுவனம் எச்சரிக்கை

21 டிச, 2022 - 11:03 IST
எழுத்தின் அளவு:
Don't-be-fooled-by-buying-Dhanush's-Vaathi:-Distribution-company-alert

தனுஷ் நடித்த, ‛வாத்தி' படம் தமிழ், தெலுங்கு என, இரு மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தை தெலுங்கு திரையுலக தயாரிப்பாளர் வம்சி தயாரிக்க, வெங்கி அட்லுாரி இயக்கி உள்ளார். படம் அடுத்தாண்டு வெளியாகிறது. இதனிடையே, வாத்தி படத் தயாரிப்பாளருடன், 'ஆரண்யா சினி கம்பைன்ஸ்' போட்ட ஒப்பந்தம், நீதிமன்றம் சென்றுள்ளது. 'வாத்தி படத்தை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம்' என, வினியோக நிறுவனம் எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, ஆரண்யா சினி கம்பைன்ஸ் அறிக்கை: வாத்தி படம் டிச.,2ல் வெளியாகும் என்றபோது, ஐந்து ஏரியாக்களுக்கு படத்தை வெளியிட, 8 கோடி ரூபாய் ஒப்பந்தம் பேசி முடிக்கப்பட்டு, அக்.,18ல் ஐந்து கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது. தீபாவளிக்கு பின் ஒப்பந்தம் போடலாம் என, தயாரிப்பு தரப்பு கூறியது. ஆனால், குறிப்பிட்டபடி ஒப்பந்தமும் போடவில்லை; படத்தையும் குறிப்பிட்ட தேதியில் வெளியிடவும் இல்லை. இதனால், முன்பணத்தை திருப்பித் தரக் கோரினோம்.

வட்டியின்றி தர சம்மதித்த தயாரிப்பு தரப்பு, நவ., 23ல் 2 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தது. நவ.,26ல் 1 கோடி ரூபாய் தருவதாக கூறினர்; தரவில்லை. இந்நிலையில், படத்தை பிப்., 17ல் வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். படத்தை நாங்களே வெளியிட முடிவு செய்து, தயாரிப்பு தரப்பை அணுகினோம்; உரிய பதில் இல்லாததால் நீதிமன்றம் சென்றுள்ளோம். காப்புரிமை சட்டப்படி, தற்போதைய நிலையில், வாத்தி படத்தின் ஐந்து ஏரியா வினியோக உரிமை, ஆரண்யா சினி கம்பைன்ஸ் வசம் உள்ளதால், இடைத்தரகர்கள் பேச்சைக் கேட்டு, வினியோகஸ்தர்கள் யாரும் ஏமாற வேண்டாம். இவ்வாறு அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பூமிகாவின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ்பூமிகாவின் இரண்டு படங்கள் ... நடிப்புக்கு சமந்தா நீண்டகால ஓய்வு நடிப்புக்கு சமந்தா நீண்டகால ஓய்வு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)