Advertisement

சிறப்புச்செய்திகள்

'அஅஅ' - 'குட் பேட் அக்லி' முதல் பார்வை : என்ன வித்தியாசம் ? | ஒரே படத்தில் கமிட்டான மூன்று சீரியல் நடிகைகள் | வறுமையில் தவிக்கும் காஜா பெரோஸ் : உதவும் திருமுருகன் | ஹீரோவாகி விட்டதால் பொறுப்பு கூடிவிட்டது: சூரி | 'கல்கி'யில் பிரபாஸ் நண்பனாக மினி ரோபோ : இந்திய கலைஞர்களால் உருவாகி உள்ளது | கண்ணப்பாவுடன் இணைந்தார் காஜல் அகர்வால் | ஜூனியர் என்டிஆருக்காக 3 மொழிகளில் பாடிய அனிருத் | பிளாஷ்பேக் : கமலையும், மோகனையும் இணைத்த பாலுமகேந்திரா | முதல் பாடல் மே 22ல், படம் ரிலீஸ் ஜூலை 12ல்: ஒரே போஸ்டரில் இரண்டு அப்டேட் வெளியிட்ட 'இந்தியன்-2' படக்குழு | ‛படையப்பா' ரீ-ரிலீஸாகிறது : ரஜினியை சந்தித்து பேசிய பிஎல் தேனப்பன் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் தபு

21 டிச, 2022 - 10:43 IST
எழுத்தின் அளவு:
Tabu-looking-forward-to-a-hat-trick-victory

பாலிவுட் நடிகை தபு திரையுலகில் நுழைந்து 30 வருடங்களை கடந்து விட்டார். தமிழில் காதல் தேசம் படம் மூலம் அறிமுகமான இவர் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட இரண்டு படங்கள் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தற்போதும் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வரும் தபு, இந்த வருடத்தில் நடித்த பூல் புளையா-2 மற்றும் கடந்த நவம்பர் மாதம் வெளியான த்ரிஷ்யம்-2 ஆகிய படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன. சந்திரமுகி படத்தின் ஹிந்தி பதிப்பாக பூல் புலையா படம் 2007ல் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக பூல் புலையா-2 உருவாகி வெற்றி பெற்றது.

அதேபோல த்ரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமாக அஜய் தேவ்கனுடன் இணைந்து நடித்து வெளியான திரிஷ்யம்-2வும் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தபு நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் நடிகர் அஜய் தேவனுடன் கைதி ரீமேக்காக ஹிந்தியில் உருவாகிவரும் போலா என்கிற படத்தில் நடித்துள்ளார் தபு.

தமிழில் நரேன் நடித்த போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தான் ஹிந்தியில் தபு நடித்துள்ளார். இந்த படமும் வரும் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே தமிழில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்தப் படம் ஹிந்தியிலும் வெற்றி பெறும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அந்தவகையில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இப்போதிருந்தே காத்திருக்கிறார் நடிகை தபு.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இந்திரா வாழ்க்கை படம் : பார்லி.யில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கும் கங்கனாஇந்திரா வாழ்க்கை படம் : பார்லி.யில் ... 2022 டாப் 50 ; பிரிட்டிஷ் பத்திரிகையில் இடம்பிடித்த ஒரே இந்திய நடிகர் ஷாருக்கான் 2022 டாப் 50 ; பிரிட்டிஷ் பத்திரிகையில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)