அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'தங்கலான்'. சுதந்திரத்திற்கு முந்தைய 18-ஆம் நூற்றாண்டில் கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் அடிமைகளாக இருந்ததை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருகிறது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இப்படம் முழுக்க முழுக்க 3டியில் உருவாகிறது.
இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் விக்ரமுடன் இணைந்து மலையாள நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் கேஜிஎப் தங்க வயல் பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் விக்ரம் மற்றும் பசுபதி நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்பொழுது ஒரு வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது . அதில் விக்ரம் தங்கலான் படத்தின் படப்பிடிப்புக்கு இடையே கோலார் தங்க வயலில் தமிழ் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி, புகைப்படம் எடுத்து கொண்டுள்ளார்.