அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பிரபல சின்னத்திரை நடிகை லதா ராவ் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அவருக்கென தனி ரசிகர் கூட்டமும் இருந்தது. அதன்பின் சக நடிகரான ராஜ்கமலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லதா ராவ் - ராஜ் கமல் தம்பதியினருக்கு லாரா, ராகா என இரு மகள்கள் உள்ளனர். பொறுப்புள்ள குடும்ப தலைவியாக மாறிவிட்ட லதா ராவ் இப்போதெல்லாம் சீரியல்களில் பெரிதாக நடிப்பதில்லை. இருப்பினும், சிறிய விளம்பர படங்கள், இன்ஸ்டாகிராம் மாடலிங் ஷூட் என ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இன்ஸ்டாவில் அவரை பின் தொடரும் சிலர், 40 வயதை தாண்டினாலும் இன்றும் இளமையாக ஜொலித்து வருகிறார் லதா ராவ். இந்நிலையில் மூத்தமகள் லாராவின் பிறந்தநாளை அண்மையில் கொண்டாடிய லதா ராவ் தனது மகளுடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். லதா ராவுக்கு திருமணமானதையே நம்ப முடியாத ரசிகர்கள், அந்த புகைப்படங்களை பார்த்து அவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்துடன் கேட்டுகின்றனர்.