'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா |
உலக அளவில் உள்ள சினிமா இணையதளங்களில் பல மொழிப் படங்களையும் பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ள இணையதளம் 'ஐஎம்டிபி'. இன்டர்நெட் மூவி டேட்டாபேஸ் என்ற அந்த இணையதளம் 2022ம் ஆண்டில் இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த டாப் 10 படங்களைப் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில் தென்னிந்திய மொழிப் படங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதில் மூன்று தமிழ்ப் படங்கள், மூன்று தெலுங்குப் படங்கள், மூன்று கன்னடப் படங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரே ஒரு ஹிந்திப் படம்தான் அப்பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
தமிழ்ப் படங்களான 'விக்ரம்' 4வது இடத்தையும், 'ராக்கெட்ரி - நம்பி விளைவு' 6வது இடத்தையும், 'பொன்னியின் செல்வன் 1' 9வது இடத்தையும் பிடித்துள்ளன.
டாப் 10 படங்களின் பட்டியல்…
1.ஆர்ஆர்ஆர் (தெலுங்கு)
2.த காஷ்மீர் பைல்ஸ் (ஹிந்தி)
3.கேஜிஎப் 2 (கன்னடம்)
4.விக்ரம் (தமிழ்)
5.காந்தாரா (கன்னடம்)
6.ராக்கெட்ரி - நம்பி விளைவு (தமிழ்)
7.மேஜர் (தெலுங்கு)
8.சீதா ராமம் (தெலுங்கு)
9.பொன்னியின் செல்வன் 1 (தமிழ்)
10.சார்லி 777 (கன்னடம்)