போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
2022ம் ஆண்டில் வெளிவந்த கன்னடத் திரைப்படமான 'காந்தாரா' இரண்டு வாரங்களுக்குப் பிறகு மற்ற மொழிகளிலும் வெளியாகி 400 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்று சாதனை புரிந்தது. அப்படத்தை இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி இந்திய அளவில் பிரபலமானார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த 2022ம் ஆண்டில் அவருக்கப் பிடித்த சில படங்களைப் பற்றிப் பேசியுள்ளார். “இந்த ஆண்டில் என்னுடைய அபிமானத் திரைப்படம் புனித் ராஜ்குமார் நடித்த டாகுமென்டரி படமான 'கந்தடா குடி'. அந்தப் படத்துடன் என்னால் எமோஷனலாக தொடர்பு கொண்டதே அதற்குக் காரணம். மறைந்த புனித் ராஜ்குமாரை கடைசியாக திரையில் பார்த்தது எனக்கு ஒரு எமோஷனலான தருணம்.
சமீபத்தில் வெளிவந்த தமிழ்ப் படமான 'லவ் டுடே' ஒரு நல்ல படம். அது போல பல கன்னடப் படங்களும் உண்டு. '777 சார்லி' அதில் எனது அபிமானத் திரைப்படம். அப்படத்தை நான் தேர்வு செய்தால் அது என்னுடைய நண்பனின் படம் அதனால் சொல்கிறேன் என்று சொல்வார்கள். ஆனால், இந்த வருடத்தின் மிகச் சிறந்த எமோஷனலான படம் அது. கன்னடத் திரையுலகத்திற்கு இப்படியெல்லாம் ஆரம்பமாக 'கேஜிஎப் 2' தான் காரணம் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்,” என்றும் அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.