போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
நடிகர் ரஜினிகாந்த் திருப்பதியில் தனது மகள் ஐஸ்வர்யா உடன் சாமி தரிசனம் செய்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது. இருதினங்களுக்கு முன் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி நேற்று இரவு திருப்பதி சென்றார். அங்கு டி.எஸ்.ஆர் விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். தொடர்ந்து இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் திருப்பதி ஏழுமலையானை சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது மகள் ஐஸ்வர்யாவும் உடன் சென்றிருந்தார். பின்னர் தேவஸ்தானம் சார்பில் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, ‛‛6 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி'' என்றார்.