அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
'பிரேமம், நேரம்' படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் பிருத்விராஜ், நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் உருவான மலையாளப் படமான 'கோல்டு' படத்தை தமிழிலும் வெளியிடுவதாக அறிவித்திருந்தனர்.
மலையாளத்தில் டிசம்பர் 1ம் தேதி வெளியான இந்தப் படம் தமிழகத்தில் தமிழில் அன்று வெளியாகவில்லை. படத்தின் டப்பிங் வேலையில் ஏற்பட்ட தாமதம் அதற்குக் காரணம் என்றார்கள். நேற்று டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால், இரண்டு நாளாகியும் இன்று வரை படம் தமிழில் வெளியாகாமல் உள்ளது. ஆனால் தமிழகத்தில் மலையாளத்தில் மட்டும் வெளியாகி உள்ளது.
இப்படத்திற்கான விமர்சனங்கள் மிகவும் நெகட்டிவாக வந்து கொண்டிருக்கின்றன. மலையாளத்திலேயே படம் தோல்வியைத் தழுவி நஷ்டத்தை ஏற்படுத்தும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால், படத்தின் தமிழகத்திற்கான தமிழ் வெளியீட்டு உரிமையை வாங்கிய வினியோகஸ்தரான கோவை சுப்பையா அட்வான்ஸ் தொகை கொடுத்ததைத் தவிர மேற்கொண்டு எந்தத் தொகையும் தர மாட்டேன் என சொல்லியிருக்கிறார். அதற்கு மலையாளப் படத் தயாரிப்பாளர் சம்மதிக்கவில்லையாம், பேசியபடி முழு தொகையையும் கேட்டிருக்கிறார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இழுபறி நீடிக்கிறதாம்.
தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் சில தியேட்டர்களில் தமிழ் பதிப்பு வெளியாகியுள்ளது. படம் தோல்வி என்று செய்திகள் வந்தபின் தமிழகத்தில் இப்படம் வெளியாவது கேள்விக்குறி ஆகிவிட்டது. இருப்பினும் அடுத்தவாரம் வெளியாகலாம் என கூறப்படுகிறது.