துல்கர் சல்மான் படத்தில் மிஷ்கின் | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் | குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? | யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது |
சின்னத்திரை நடிகையான ரித்திகா தமிழ்செல்வி குக் வித் கோமாளி உள்ளிட்ட சில விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' ஹிட் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவருக்காக தமிழ்நாட்டில் ஒரு இளைஞர் கூட்டமே காதல் ரோஜாவுடன் சமூகவலைதளங்களில் சுற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், ரித்திகாவோ அந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சைலண்டாக திருமணம் செய்துள்ளார்.
விஜய் டிவியில் தொடர்ந்து நடித்து வரும் ரித்திகா, அதே டிவியில் வேலை பார்த்து வரும் வினு என்பவரை காதலிப்பதாகவும், விரைவில் அவர்கள் திருமணம் நடைபெறும் எனவும் சில தினங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், ரித்திகா - வினு ஆகியோரின் திருமணம் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிம்பிளாக நடந்து முடிந்துள்ளது. திருமண கோலத்துடன் ரித்திகா வெளியிட்ட புகைப்படத்திற்கு குக் வித் கோமாளி புகழ், ஸ்ருதிகா அர்ஜூன், தர்ஷா குப்தா, சிவாங்கி உட்பட பல சின்னத்திரை பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.