50 லட்சம் உதவி செய்வதாக பிரபாஸ் சொல்லவில்லை : காமெடி நடிகரின் குடும்பம் மறுப்பு | 77 லட்சம் மோசடி செய்ததாக நடிகை ஆலியா பட்டின் முன்னாள் பெண் உதவியாளர் கைது | 24 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டலீில் ரீ ரீலீஸாகும் மோகன்லாலின் ராவண பிரபு | காமெடி நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது! | தனியார் பேருந்துகள் ஓடாத கேரளா வெளிநாடு போல இருக்கிறது : 2018 இயக்குனர் சர்ச்சை கருத்து | 7 வருடங்களாக புறக்கணிக்கப்பட்ட பட வாய்ப்பு : விஷ்ணு விஷால் ஓபன் டாக் | மீண்டும் அல்லு அர்ஜுன் உடன் இணையும் ராஷ்மிகா | டான் 3ம் பாகத்தில் இணைந்த கிர்த்தி சனோன்! | தெலுங்கு நடிகருடன் இணையும் பி.எஸ்.மித்ரன்! | பிரபாஸ் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் தமன்னா! |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடரில் வில்லி வெண்பாவாக நடித்து புகழ் பெற்றவர் பரீனா ஆசாத். கர்ப்பமாக இருந்த காலக்கட்டத்திலும் தொடர்ந்து நடித்து வந்த பரீனா, பிரசவத்துக்கு பிறகும் சீக்கிரமே கம்பேக் கொடுத்து ரசிகர்களை அதிர்ச்சி கலந்த இன்பத்தில் ஆழ்த்தினார். இப்போதும் வில்லியாக கலக்கி வரும் அவர் இண்ஸ்டாவிலும் போட்டோஷூட் மாடலிங் என அதிக பாலோவர்களை பிடித்து வைத்திருக்கிறார். அவர் தற்போது தனது மகன் ஸயனின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். துபாயில் உள்ள மெரீனா க்ரூஸ் யாட்ச் என்ற கப்பலில் மகனின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ள பரீனா அதன் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வெண்பாவின் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.