துல்கர் சல்மான் படத்தில் மிஷ்கின் | டூரிஸ்ட் பேமிலி படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய நிறுவனம் | குட் பேட் அக்லி ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? | யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது |
‛பரியேறும் பெருமாள்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தொடர்ந்து தனுஷை வைத்து ‛கர்ணன்' படத்தை கொடுத்தார். தற்போது உதயநிதியை வைத்து மாமன்னன் என்ற படத்தை எடுத்துள்ளார். கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் அடுத்து வாழை என்ற படத்தை இயக்குகிறார். கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி நடிக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தயாரிக்கும் இந்த படத்தை மாரி செல்வராஜும் இணைந்து தயாரிக்கிறார். இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று(நவ., 21) ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கொங்கராயகுறிச்சியில் துவங்கியது. இதை நடிகர் உதயநிதி துவக்கி வைத்தார். 1994ம் ஆண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாவதாக கூறப்படுகிறது. படத்தில் நான்கு சிறுவர்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.