ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

53வது சர்வதேச திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. வருகிற 28ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் 79 நாடுகளை சேர்ந்த 280 படங்கள் திரையிடப்படுகிறது. நேற்று நடந்த துவக்க விழாவில் நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய மந்திரி அனுராக் தாக்குர் விழாவை முறைப்படி துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் எல்.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த விழாவில் ஆண்டுதோறும் சிறந்த சினிமா ஆளுமைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாதனையாளர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு அந்த விருதினை தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பெறுகிறார். இதனை மத்திய தகவல் மற்றும் செய்திதுறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இந்த விருதை வகீதா ரகுமான், ரஜினிகாந்த், இளையராஜா, எஸ்.பி.பாலசுப்பிரமணியம், அமிதாப் பச்சன், சலிம்கான், பிஸ்வஜித் சட்டர்ஜி, ஹேமமாலினி, பரசூன் ஜோஷி ஆகியோர் பெற்றுள்ளனர்.