அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இயக்குனர் வம்ஷி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வாரிசு. இந்தப்படத்தின் முதல் பாடலான 'ரஞ்சிதமே ரஞ்சிதமே' பாடல் சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை பெற்று ஹிட்டானது. இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் மூலம் ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் முதன் முறையாக இணைந்துள்ளார்.
தில் ராஜுவின் தயாரிக்கும் இந்தப் படத்தில், சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷ்யாம், யோகி பாபு, சங்கீதா, குஷ்பு, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் வாரிசுத் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தை தமிழகத்தில் மாஸ்டர் மற்றும் விஜய் 67 பட தயாரிப்பாளர் லலித் குமார் வெளியிடுகிறார். இந்த தகவலை இன்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.