நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் |
நடிகை கவுரி கிஷன் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அந்தப் படம் பெரிய வெற்றி பெற்றதால் கவுரி கிஷனுக்கு தமிழ் மற்றும் மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன. கவுரி கிஷன் கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது தெலுங்கில் சிரஞ்சீவியின் மகள் சுஸ்மிதா கோனிடேலா தயாரிக்கும் படத்தில் கவுரி கிஷன் மற்றும் சந்தோஷ் சோபன் இருவரும் முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் .
இந்நிலையில் கவுரி கிஷனிடம் ரசிகர் ஒருவர் உங்களுடைய அடுத்த தமிழ் படம் எது என கேட்டதற்கு, கவுரி கிஷன்.. விரைவில் ஜி வி பிரகாசுடன் நடிக்க இருப்பதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு பதில் அளித்துள்ளார்.