அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட தனுஷ், நடிப்பு மட்டுமல்லாது இயக்கம், பாடல் எழுதுவது, பாடுவது, தயாரிப்பு என பல வேலைகளை செய்பவர். 2017ம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ராஜ்கிரண் கதாநாயகனாக நடித்திருந்தார். தனுஷின் சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்தார்.
இந்நிலையில் தனுஷ் மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்திற்கு பிறகு ராயன் படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.