போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
கமல்ஹாசன் தயாரித்து நடித்த விக்ரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்தபடியாக மீண்டும் விஜய்யை வைத்து விஜய்யின் 67வது படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் மேனன், மிஷ்கின், பிருத்விராஜ், மன்சூர் அலிகான், திரிஷா, கீர்த்தி சுரேஷ் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதோடு மட்டுமின்றி இப்படத்தில் விக்ரம் படத்தில் கமல் நடித்த கேரக்டரும் இடம் பெற்று அவர் ஒரு கெஸ்ட் ரோலில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. தனது முந்தைய படங்களின் கதாபாத்திரங்களை புதிய படங்களில் இணைத்து வரும் லோகேஷ் கனகராஜ், அந்த பாணியை விஜய் 67வது படத்திலும் கையாளப்போவதாக கூறப்படுகிறது.