அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஹிந்தி சினிமாவில் 1983ம் ஆண்டு பெயிண்டர் பாபு என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை மீனாட்சி சேஷாத்திரி. தொடர்ந்து ஹிந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், 1989ம் ஆண்டு கே.பாக்யராஜ் நாயகனாக நடித்த என் ரத்தத்தின் ரத்தமே என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் பிரபு நடித்த டூயட் படத்தில் நாயகியாக நடித்தார். 1995ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்ட மீனாட்சி சேஷாத்திரிக்கு தற்போது 59 வயதாகிறது.
இந்நிலையில் மீண்டும் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் பாலிவுட் சினிமாவில் அவரை எதிர்பார்க்கலாம். அதோடு டோலிவுட், கோலிவுட்டிலும் தன்னுடைய வயதுக்கேற்ற முக்கியத்துவம் வாய்ந்த அம்மா மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிப்பதற்கான முயற்சிகளிலும் அவர் ஈடுபட்டுள்ளாராம்.