அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சசிகலாவின் சகோதரி மகன் பாஸ்கரன். இவர் பாஸ் என்ற பெயரில் தலைவன் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு தெர்மாகோல்ராஜா என்ற படத்தில் நடிப்பதாக இருந்தது, பின்னர் அந்த படம் கைவிடப்பட்டது. இதற்கிடையில் பாஸ்கரன் சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்று திரும்பினார்.
இந்த நிலையில் பாஸ்கரன் மீண்டும் நடிக்க வருகிறார். பிரபல தயாரிப்பாளர் சித்திரை செல்வன் மற்றும் ஜாக் புரொடக்ஷன்ஸ் ஜெகதீஷ் இணைந்து தயாரிக்கும் 'டிஃபெண்டர்'. படத்தில் அவர் நடிக்கிறார். கமல்ஹாசனிடம் அசோசியேட் இயக்குநராக பணிபுரிந்த திரைப்படக் கல்லூரி மாணவர் ரவிதேவன் இயக்குகிறார்.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் இந்தியாவின் முன்னணி நடிகர், நடிகைகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என்று தெரிகிறது. ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.