முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் | நில மோசடி : நடிகை கவுதமி புகார் | சில கற்றார் பேச்சும் இனிமையே - குமரிமுத்து வீடியோவை பகிர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு | கில்லி பார்த்துவிட்டு திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | தக்லைப் படத்திலிருந்து மீண்டும் விலகினாரா ஜெயம் ரவி? | மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் ‛பைசன் காளமாடன்' |
கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா மற்றும் பலர் நடித்து தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் அக்டோபர் 21ம் தேதி வெளிவந்த படம் 'சர்தார்'. இப்படத்தை 'இரும்புத் திரை, ஹீரோ' படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கியிருந்தார். தீபாவளிக்கு வெளியான மற்றொரு படமான சிவகார்த்திகேயனின் 'ப்ரின்ஸ்' படத்தை விடவும் 'சர்தார்' படம் அதிக வசூலைப் பெற்று வணிக ரீதியாக வெற்றிப் படமாகவும் அமைந்துள்ளது.
அதனால், படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு தயாரிப்பாளர் லட்சுமண் குமார் சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் ஒன்றைப் பரிசாக அளித்துள்ளார். அதன் சாவியை படத்தின் நாயகன் கார்த்தியிடமிருந்து பெற்றுக் கொண்டார் மித்ரன்.
'சர்தார்' படம் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகம் வர வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே படத்தின் நன்றி விழாவில் தெரிவித்திருந்தனர்.