யாரிடமும் எளிதில் சிக்க மாட்டேன் : கயாடு லோஹர் | 'கம் பேக்' கொடுக்கப் போகும் லைகா | மலையாள பட இயக்குனருடன் கைகோர்த்த ஜீவா | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை | விஜய்க்காக பின்னணி பாடிய ராப் இசைக் கலைஞர் அனுமான் கைண்ட் | கூலி படத்தை அடுத்து கைதி 2 வை இயக்கும் லோகேஷ் கனகராஜ் | அர்ஜூன் தாஸிற்கு தாதா சாகேப் பால்கே விருது!; 'ரசவாதி' படத்திற்காக அவர் பெறும் 3வது விருது | 7 வருடங்களுக்கு பிறகு திரைக்கு வரும் ஜி.வி. பிரகாஷ் படம்! | ஜெய்யின் 'வொர்கர்' புதிய பட அறிவிப்பு! | மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வெளியாகாத ரெட்ரோ, ஹிட் 3 ஹிந்தி பதிப்புகள் ; காரணம் என்ன ? |
வாடகைத்தாய் பிரச்னை ஒன்றும் சிக்கலான விஷயம் இல்லை. அதில் நடிகர்கள் (நயன்தாரா, விக்னேஷ்சிவன்) சம்பந்தப்பட்டதால் அதனை பெரிதாக்கி விட்டார்கள் என்று வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். சமந்தா நடித்துள்ள யசோதா படத்தில் வரலட்சுமி வாடகைத்தாய் ஏற்பாடு செய்யும் மருத்துவமனையின் சேர்மனாக நடித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியிருப்பதாவது: இதுபோன்ற கதையும் கதாபாத்திரங்களும் எப்படி எழுதினார்கள் என்பதுதான் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதைப் பற்றி நான் இயக்குநர்களிடமும் கேட்டேன். கதையின் போக்கில் தான் என்னுடைய எதிர்மறைத் தன்மை வெளிப்படும். எனக்கும் சமந்தாவுக்கும் இடையில் இருக்கும் உறவு பார்வையாளர்களுக்கு ஆர்வமூட்டுவதாக அமையும். சமந்தாவை போல பெரிய ஆக்ஷன் காட்சிகள் எனக்கு இல்லை. மிகவும் அமைதியான கதாபாத்திரம் எனக்கு. நல்ல கதாபாத்திரம் கிடைக்கும்போது எனக்கு நானே சவாலாக எடுத்து கொள்வேன்.
என்னுடைய கதாபாத்திரம் சமந்தாவுக்கு இணையாக கதையில் பயணித்துக் கொண்டே இருக்கும். யசோதாவிற்கு யாருடைய உதவியாவது அவளுடைய வாழ்க்கையில் வேண்டும் என்ற நிலையில் இருக்கும் போதுதான் என்னுடைய கதாபாத்திரம் உள்ளே வரும். இந்தக் கதை ஒரு அறிவியல் புனைவு. படத்தில் வாடகைத்தாய் என்கிற முறை சரியா தவறா என்று விவாதிக்கவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்பதை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதே படத்தின் நோக்கம். மேலும் தெலுங்கில் கிராக் படத்திற்கு பின் எனக்கு நல்ல வேடங்கள் கிடைக்கின்றன. தெலுங்கு படங்களுடன் ஒன்றி விட்டேன் என்கிறார் வரலட்சுமி.