'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ஷாரூக்கான் இன்று(நவ., 2) தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அதை முன்னிட்டு அவர் நடித்து அடுத்து வெளிவர உள்ள 'பதான்' ஹிந்திப் படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரகாம் மற்றும் பலர் நடிக்கும் இந்தப்படம் 2023ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதியன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.
ஷாரூக் கதாநாயகனாக நடித்து நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவர உள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீது அவருடைய ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உள்ளன. அதைப் பூர்த்தி செய்யும் விதத்தில் டீசர் அதிரடி ஆக்ஷனாக உள்ளது. சில காட்சிகளைப் பார்க்கும் போது ஹாலிவுட் படங்களில் பார்ப்பது போலவும் இருக்கிறது.
டீசருக்கு பாலிவுட் பிரபலங்களும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகிறார்கள். டீசர் வெளியான குறைந்த நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. புதிய சாதனையைப் படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.