அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சமந்தா நடித்துள்ள யசோதா படம் நவம்பர் 4ம் தேதி வெளிவர இருக்கிறது. சமீபத்தில் அதன் டீசர் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் யசோதா படத்திற்கு டிரிப் ஏற்றிய நிலையில் டப்பிங் பேசிய போட்டோவை வெளியிட்ட சமந்தா, ‛‛எனக்கு மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோய் பாதிப்பு இருப்பதாகவும், விரைவில் அதிலிருந்து குணமாகி வருவேன்'' என கூறினார்.
இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பலரும் சமந்தாவுக்கு ஆறுதலும், நம்பிக்கையும் அளித்து வருகிறார்கள். சமந்தாவின் முன்னாள் கணவரான நாகசைதன்யாவின் தம்பியும், நடிகருமான அகில், விரைவில் சமந்தா குணமாகி வர வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வெளியிட்ட பதிவில், “சமந்தா, நம் வாழ்க்கையில் அவ்வப்போது சவால்கள் வந்து கொண்டேயிருக்கும். அவை நம் மனவலிமையை கண்டறிவதற்காகக் கூட இருக்கலாம். மிகப்பெரிய மனவலிமை கொண்ட அற்புதமான பெண் நீங்கள். விரைவில் உங்களுக்கான இந்த சவாலையும் நீங்கள் முறியடிப்பீர்கள். தைரியமும், நம்பிக்கையும் கிடைக்க வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.