அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
பார்த்திபன் நடிப்பு, இயக்கத்தில் வெளியான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' மற்றும் 'ஒத்த செருப்பு' ஆகிய திரைப்படங்கள் அனைவரின் கவனத்தைப் பெற்றன. ‛ஒத்த செருப்பு' படத்தைத் தொடர்ந்து பார்த்திபன் நடித்து இயக்கிய திரைப்படம் 'இரவின் நிழல்'. நான் லீனியர் திரைக்கதையில் ஒரே ஷாட்டில் உருவான இந்தப் படத்தில் பார்த்திபன் 'நந்து' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ரோபோ ஷங்கர், வரலட்சுமி சரத்குமார், பிரியங்கா ரூத், பிரிஜிடா சகா மற்றும் பலர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்தார். ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவு செய்தார்.
கடந்த ஜூலை 15 ஆம் தேதியன்று திரையரங்குகளில் இந்த படம் வெளியானது. இரவின் நிழல் திரைப்படம் ரிலீஸூக்கு முன்பே பல சிறந்த அங்கீகாரங்களை பெற்றது. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், "காலை வணக்கம்! அமேசானில் இன்றோ நாளையோ 'இரவின் நிழல்' வந்தே விடும். அதை வரவேற்க நீங்களும், அறிவிக்க நானும் ஆவலுடன் … இருக்கிறோம். பார்ப்போம்! நீங்கள் காட்டும் ஆர்வத்திற்கு நன்றி!!!" என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.