ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்த சில வருடங்களுக்கு முன்பு இயக்குனர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் பைரவா. இந்த படத்தில் கதாநாயகியான கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக முக்கியமான கேரக்டரில் நடித்து இருந்தவர் மலையாள நடிகை அபர்ணா வினோத். இவருக்கும் கோழிக்கோட்டை சேர்ந்த ரினில்ராஜ் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து அபர்ணா வினோத் கூறும்போது, “உன்னை என்று முதன்முதலாக சந்தித்தேனோ அன்று முதல் எல்லாமே மாறத் துவங்கியது” என்று குறிப்பிட்டுள்ளார். இதிலிருந்து இவர்களது திருமணம் காதல் திருமணம் என்பது தெரிகிறது.
மலையாளத்தில் 'நான் நின்னோடு கூடேயுண்டு' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அபர்ணா வினோத், அதைத்தொடர்ந்து கோகினூர் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தபோது ரசிகர்களால் பெரிதும் கவனிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து தமிழில் பைரவா படத்தில் நடித்தார். பின்னர் கடந்த வருடம் தமிழில் வெளியான நடுவண் என்கிற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் அபர்ணா வினோத்.