அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சர்வதே திரைப்பட விழா, கோவாவில் நடக்கும் விழா. இந்த ஆண்டுக்கான 53வது சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் மாதம் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் அந்தந்த ஆண்டு வெளியான 25 சிறப்பான திரைப்படங்கள் திரையிடப்படும். இந்த ஆண்டு விழாவில் 3 தமிழ் படங்கள் திரையிடப்படுகிறது. த.செ ஞானவேல் இயக்கி சூர்யா நடிப்பில் உருவான ஜெய்பீம், எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய குரங்கு பெடல், ரா.வெங்கட் இயக்கிய கிடா ஆகிய படங்கள் மூன்று படங்கள் தேர்வு செய்யப்பட்டு விழாவில் திரையிடப்பட உள்ளன.
மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகத்தால் உருவாக்கப்பட்ட தேர்வுக்குழுவில் பிரபல இயக்குநரும், படத்தொகுப்பாளருமான வினோத் கனாத்ரா தலைமையில், ஒளிப்பதிவாளர் ஏ.கார்த்திக் ராஜா உள்பட 12 உறுப்பினர்கள் இடம்பெற்றிருந்தனர். அவர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து வந்திருந்த படங்களில் 20 படங்களை தேர்வு செய்துள்னர். இதில் 3 தமிழ் படங்கள் இடம்பெற்றுள்ளது. இதுதவிர தேசிய நீரோட்ட திரைப்படப் பிரிவில், விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ், ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் உள்பட 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.