அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
நம்ம ஊரு நல்ல ஊரு படம் தொடங்கி எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் ராமராஜன் . இவர் நடித்த படங்கள் கிராமப்புறங்களில் அதிக நாட்கள் ஓடின. குறிப்பாக இவர் நடிக்கும் படங்களில் இடம்பெற்ற இளையராஜாவின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தன. 2012ம் ஆண்டு மேதை என்ற படத்தில் நடித்த ராமராஜன் அதன்பிறகு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் சாமானியன் என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராமராஜன், தற்போதைய நடிகைகள் குறித்து பேசினார். அப்போது சாவித்ரி, சரோஜாதேவி , கே.ஆர்.விஜயா போன்ற நடிகைகளின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறிய ராமராஜன், தற்போதைய நடிகைகளில் சாவித்ரியின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி உருவான மகாநடி படத்தில் நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் நடிப்பு பிடித்திருந்தது. அவர் மிகவும் நேர்த்தியாக அந்த படத்தில் நடித்திருந்தார் என்று கீர்த்தி சுரேஷ் நடிப்புக்கு புகழாரம் சூட்டினார் ராமராஜன்.