அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் |
பிரதமர் நரேந்திர மோடி பல சமயங்களில் தீபாவளி பண்டிகையை இந்திய ராணுவ வீரர்களுடன் கொண்டாடி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டும் நேற்றைய தினம் கார்கிலில் உள்ள ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். அப்போது அவர்களுக்கு தனது கையால் இனிப்பு வழங்கினார். அங்கு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழக ராணுவ வீரர்கள், சுராங்கனி என்ற தமிழ் பாடலை பாடினார்கள். அதோடு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த வந்தே மாதரம் பாடலையும் பாடினார்கள்.
இந்த பாடல்களை பிரதமர் மோடி ரசித்து கேட்டு கைதட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். அதை அடுத்து தனது ட்விட்டரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர் என்று பதிவிட்டு அங்கு எடுக்கப்பட்ட வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அவரது இந்த டுவிட்டர் பதிவை இசையமைப்பாளர் ஏ .ஆர். ரகுமான் ரீ-டுவீட் செய்துள்ளார் . அதோடு, இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன் போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன், தாய் மண்ணே வணக்கம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.