அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தின் முன்பு அவரது ரசிகர்கள் கூடுவார்கள். அப்போது ரஜினி வீட்டுக்குள் நின்றபடியே ரசிகர்களை பார்த்து தனது தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார். அதுபோன்று நேற்றும் ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் ரஜினி. அதோடு தனது பேரன்களான யாத்ரா, லிங்காவுடன் இணைந்து அவர் நேற்றைய தினம் தீபாவளி பண்டிகையை கொண்டாடி இருக்கிறார். மேலும் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி தனது இரண்டு மகன்கள் மற்றும் தந்தை ரஜினிகாந்த் உடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் தனது இரண்டு மகன்களின் கால்களில் மஞ்சள் சந்தனம் பூசி விடுகிறார். அதோடு தான் பட்டாசு வெடிக்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
![]() |