அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் |
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதியர் கடந்த ஏப்ரலில் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான நான்கே மாதங்களில் தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்ததாக கடந்த அக்., 9ல் விக்னேஷ் சிவன் அறிவித்தார். நான்கே மாதங்களில் குழந்தையா என பலரும் ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பிய நிலையில் அவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்ற விபரம் தெரிய வந்தது.
அதேசமயம் இவர்கள் விதிமுறைகளை மீறி குழந்தை பெற்றதாக சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து இதுபற்றி விசாரிக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியர் 6 ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்ததாகவும், கடந்த டிசம்பரிலேயே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற விண்ணப்பித்ததாகவும் தகவல் வெளியானது. தொடர்ந்து இதுதொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், வாடகைதாய் விவகாரம் தொடர்பாக இன்று சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொள்கின்றனர். ஓரிரு நாளில் விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.