22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில், அஜனீஷ் லோக்நாத் இசையமைப்பில் கன்னடத்தில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள படம் 'காந்தாரா'. அப்படத்தில் இடம் பெற்ற பாடல்களும் சூப்பர் ஹிட்டாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'வராஹ ரூபம்' என்ற பாடல் பலரையும் மெய்மறக்கச் செய்துள்ளது.
ஆனால், அந்தப் பாடல் தங்களது 'நவரசம்' ஆல்பத்தின் 'தவிர்க்க முடியாத ஒற்றுமை' ஆக இருப்பதாக அந்த 'நவரசம்' ஆல்பத்தை உருவாக்கிய 'தாய்க்குடம் பிரிட்ஜ்' என்ற மலையாள இசைக் குழு தெரிவித்துள்ளது. அது பற்றிய அவர்களது இன்ஸ்டாகிராம் பதிவில், 'நவரசம் மற்றும் வராஹ ரூபம்' பாடல் போஸ்டர்களைப் பகிர்ந்து, “தாய்க்குடம் பிரிட்ஜ் எந்த வகையிலும் 'காந்தாரா' படத்துடன் இணைந்து இருக்கவில்லை என்பதைத் தெரியப்படுத்த விரும்புகிறோம். எங்களது 'நவசரம்' மற்றும் 'வராஹ ரூபம்' பாடல்களுக்கு இடையில் தவிர்க்க முடியாத ஒற்றுமைகள் இருக்கிறது. இசை ஒலியைப் பொறுத்தவரையில் இது பதிப்புரிமைச் சட்டத்தை அப்பட்டமாக மீறுவதாகும்.
'ஈர்க்கப்பட்டது' மற்றும் 'திருட்டு' ஆகியவற்றிற்கு இடையில் உள்ள வேறுபாடு மெல்லிய ஒன்றுதான் என்பது எங்கள் நிலைப்பாடு. அதனால், இதற்கு அந்தப் பாடலின் கிரியேட்டிவ் டீம் தான் பொறுப்பு என நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளோம். அந்தப் பாடலின் மீது எங்களுக்கு உண்டான அங்கீகாரத்தை கொடுக்காமல், படக்குழுவின் கிரியேட்டிவ் டீம் அந்தப் பாடலை உருவாக்கியது போல சொல்லிக் கொள்கிறார்கள்.
எங்கள் பாடல்களைக் கேட்போர்களின் ஆதரவையும், இது பற்றி பரவச் செய்யவும் கேட்டுக் கொள்கிறோம். எங்களது சக கலைஞர்களையும், இசை காப்புரிமையைக் காப்பாற்ற கருத்து சொல்லுமாறு கேட்டுக் கொள்கிறோம்,” எனத் தெரிவித்துள்ளார்கள்.
தாய்க்குடம் பிரிட்ஜ் உருவாக்கிய 'நவரசம்' பாடல் மற்றும், 'காந்தாரா' படத்தின் 'வராஹ ரூபம்' பாடல் லின்க் ஆகியவை கீழே....
நவரசம் : https://www.youtube.com/watch?v=oYK6JU7Nx38
காந்தாரா : https://www.youtube.com/watch?v=gH_RYRwVrVM