அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
3 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளத்தில் வெளிவந்து பெரிய வரவேற்பை பெற்ற படம் ஹெலன். மதுக்குட்டி சேவியர் இயக்கி இருந்தார். அன்னா பென், லால் நடித்திருந்தார்கள். ஒரு ஷாப்பிங் மாலில் உள்ள பாஸ்ட்புட் கடையில் வேலை பார்க்கும் கதையின் நாயகி அங்குள்ள பிரீசர் அறையில் மாட்டிக் கொண்டு தவிப்பதும், மகளை தேடி தந்தை அலைவதும்தான் படத்தின் கதை.
இந்த படத்தை நடிகர் அருண் பாண்டியன் தமிழில் அன்பிற்கினியாள் என்ற பெயரில் ரீமேக் செய்தார். இதில் தந்தையாக அருண் பாண்டியனும், மகளாக அவரது சொந்த மகள் கீர்த்தி பாண்டியனும் நடித்திருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது இந்த படம் ஹிந்தியில் போனி கபூர் தயாரிப்பில் மிலி என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதில் மலையாளத்தில் அன்னா பென், தமிழில் கீர்த்தி பாண்டியன் நடித்த கேரக்டரில் ஷான்வி கபூர் நடித்துள்ளார். மலையாளத்தில் இயக்கிய மதுக்குட்டி சேவியரே இந்த படத்தை இயக்கி உள்ளார். நவம்பர் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
மலையாள ஹெலன் போன்று தமிழ் அன்பிற்கினியாள் இல்லை என்கிற விமர்சனம் எழுந்தது. கோகுல் இயக்கி இருந்தார். தற்போது ஹிந்தி ரீமேக்கை ஓரிஜினல் இயக்குனரே இயக்கி இருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு ஓப்பீடும் தொடங்கி உள்ளது. அன்னா பென்னை, ஜான்வி மிஞ்சுவாரா என்பது படம் வெளிவந்ததும் தெரியும்.