Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

இளைய தலைமுறையின் மனதை கெடுக்கிறீர்கள் : ஏக்தா கபூருக்கு நீதிமன்றம் கண்டனம்

15 அக், 2022 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Court-slams-Ekta-kapoor

பாலிவுட் திரையுலகில் ஆண்களுக்கு சவால் விடக்கூடிய வகையில் பல வருடங்களாக தொடர்ந்து வெற்றிகரமான, துணிச்சலான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏக்தா கபூர். சர்ச்சைக்குரிய படங்களை தயாரிப்பதற்கு தயங்காத இவர், தற்போது ஓடிடி தளங்கள் வந்துவிட்ட நிலையில் வெப்சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். அந்தவகையில் இவர் ஏற்கனவே தயாரித்த ட்ரிபிள் எக்ஸ் என்கிற வெப்சீரிஸின் இரண்டாம் பாகம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இதில் ராணுவத்தில் பணிபுரிபவர்கள் பற்றியும் அவர்களது மனைவிகள் பற்றியும் தரக்குறைவான காட்சிகளை இடம்பெறச் செய்துள்ளதாக ஏக்தா கபூர் மீது முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், ஏக்தா கபூரின் இந்த செயலுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்தபோது, “ஏதாவது செய்தே ஆக வேண்டும்.. நீங்கள் நாட்டிலுள்ள இளைய தலைமுறையின் மனதைக் கெடுக்கும் வேலையில் இறங்கியுள்ளீர்கள். இன்று ஓடிடி தளத்தில் எல்லாமே கிடைக்கிறது. நீங்கள் எந்தவிதமான சாய்ஸை மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்.? இளைஞர்களின் மனதை கெடுக்கும் வேலையைத்தான் செய்துகொண்டு இருக்கிறீர்கள்” என்ற தங்களது கோபத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் ஏக்தா கபூருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞறிடம், “ஒவ்வொரு முறையும் அவருடைய இதுபோன்ற வழக்குகளுக்காக நீங்கள் இங்கே வருகிறீர்கள்.. இதை நாங்கள் பாராட்ட முடியாது. இந்த நீதிமன்றம் வலிமையானவர்களுக்கானது அல்ல.. குரல் கொடுக்க முடியாத எளியவர்களுக்கானது. நீங்கள் இனி இதுபோன்று ஒரு பெட்டிஷன் கொண்டு வந்தால், அதற்கு நாங்கள் நிச்சயமாக ஒரு விலை வைக்க நேரிடும். இதை தயவுசெய்து உங்களுடைய கிளையன்ட்டிடம் தெரியப்படுத்துங்கள்” என்றும் கடுமை காட்டியுள்ளனர்.

அதுமட்டுமல்ல பீகாரில் உள்ள பெகுசராயில் உள்ள கீழமை நீதிமன்றம் ஒன்றில் இதே காரணத்திற்காக ஏக்தா கபூர் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் அவருக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
மன அமைத்திகாக ஆன்மிக தேடல் : பிச்சை எடுக்கும் பாலிவுட் நடிகைமன அமைத்திகாக ஆன்மிக தேடல் : பிச்சை ... நவம்பர் 18ல் ஹிந்தியில் வெளியாகும் திரிஷ்யம் 2 நவம்பர் 18ல் ஹிந்தியில் வெளியாகும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
17 அக், 2022 - 06:56 Report Abuse
NicoleThomson அவளை கொண்டு வந்து தமிழக சினிமா மீடியாவில் விட்டு விடுங்கள், கல்வித்தந்தையின் மகளும், மன்னரின் மகனும் ஒரு வழி பண்ணிவிடுவார்கள்
Rate this:
NALAM VIRUMBI - Madurai,இந்தியா
16 அக், 2022 - 10:10 Report Abuse
NALAM VIRUMBI நல்ல விஷயஙகளை இளைஞர்களுக்கு கற்பிப்பதை விடுத்து அவர்களின் மனதை கெடுக்கும் இது போன்ற கயவர்களை (ஆண், பெண் எவராயினும்) கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள். கேவலம் பணத்திற்காக சமுதாயத்தை கெடுக்கும் இவர்களுக்கு நரகத்தில் கடும் தண்டனை உண்டு என்பதை இந்த மூடர்கள் அறிவில்லை போலும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in