போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா |
தரமணி படத்தில் அறிமுகமான வசந்த் ரவி, அதன்பிறகு ராக்கி படத்தில் நடித்தார். தற்போது ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அடுத்து அவர் நடிக்கும் படம் வெப்பன்.
இந்த படத்தை மில்லியன் ஸ்டூடியோ சார்பில் எம்.எஸ்.மன்சூர் தயாரிக்கிறார், ஏ.குகன் சென்னியப்பன் இயக்குகிறார். இவர் பாபி சிம்ஹா, பார்வதி நாயர் நடித்த 'வெள்ளை ராஜா இணையத் தொடரை இயக்கி இருந்தார். 'சவாரி' என்ற சைக்கோ த்ரில்லர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
இந்த படத்தில் வசந்த் ரவியுடன் சத்யராஜ் நடிக்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார், பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்கிறார். சஸ்பென்ஸ்- ஆக்ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசங்களில் நடைபெற இருக்கிறது. படத்தின் மற்ற நடிகர்கள் குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.