அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்ற படம் 'லூசிபர்'. இப்படத்தைத் தெலுங்கில் மோகன் ராஜா இயக்க சிரஞ்சீவி, நயன்தாரா மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்து இன்று(அக்.,5) வெளியிட்டுள்ளனர். சல்மான் கான் சிறப்புத் தோற்றத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். இன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் நடந்த நிலையில் படத்திற்கு ரசிகர்களிடமிருந்து பாசிட்டிவ்வான விமர்சனங்கள்தான் வந்து கொண்டிருக்கின்றன.
சிரஞ்சீவியின் படங்களுக்கு தமிழகத்தில் குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்கும். ஆனால், 'காட்பாதர்' படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகவில்லை. இங்கு 'பொன்னியின் செல்வன்' படம் பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருப்பதால் பட வெளியீட்டை தள்ளி வைத்துள்ளதாகத் தெரிகிறது. குறைவான தியேட்டர்களில் மட்டும் வெளியானால் அது சிரஞ்சீவியின் இமேஜுக்கு சரியாக இருக்காது என்பதும் காரணமாக இருக்கலாம்.
அதே சமயம் மற்ற தெலுங்குப் படங்களான நாகார்ஜுனா நடித்துள்ள 'த கோஸ்ட்' தெலுங்கிலும், தமிழ் டப்பிங்கிலும், மற்றொரு தெலுங்குப் படமான 'ஸ்வாமி முத்யம்' படமும் இன்று குறைந்த அளவிலான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது.