அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
சின்னத்திரையில் பல ஹிட் சீரியல்களை விஜய் டிவி கொடுத்திருந்தாலும், அந்த சேனலில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரின் இடத்தை வேறு எந்த சீரியலாலும் பிடிக்க முடியாது. அதிலும், செந்தில் - ஸ்ரீஜா காம்போவிற்கு ரசிகர்கள் மனதில் எப்போதுமே தனியொரு இடம் உண்டு. ரீல் லைப் ஜோடியான இருவரும் ரியல் லைப்பிலும் ஜோடியாகி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். இருப்பினும் இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டு வந்ததை பார்த்து ரசிகர்களே வருத்தமடைந்தனர். இந்நிலையில் 8 வருட துயரத்தை போக்கும் வகையில் ஸ்ரீஜா தற்போது தாய்மையடைந்துள்ளார். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை இண்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்ட செந்தில் வளைகாப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதைபார்த்து மகிழ்ச்சியடைந்த ரசிகர்கள் குழந்தை நலமுடன் பிறக்க வேண்டும் என பிரார்த்தித்து வருகின்றனர்.