பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் | 'அமரன்' வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வாரா 'மதராஸி' ? | ரிலீஸ் தேதி குழப்பத்தில் 'கருப்பு' : காத்திருக்கும் ரசிகர்கள் | பிளாஷ்பேக் : சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சூட்டிய சூப்பர் ஸ்டார் | பிளாஷ்பேக் : பாரதிராஜா இயக்கதில் நடிக்க மறுத்த சன்னி தியோல் | பாரிஜாதம் : புதிய தொடரில் ஆலியா மானசா | 50 பேர் ஆசீர்வாதத்தால் கிடைத்த வாய்ப்பு: நமிதா நெகிழ்ச்சி | ஜெய் படம் மூலம் தமிழுக்கு வரும் கன்னட நடிகை |
மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'பொன்னியின் செல்வன்'. படம் வெளியான நாளிலிருந்தே தினமும் படத்தைப் பார்க்க மக்கள் குடும்பம் குடும்பமாக தியேட்டர்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். காலாண்டு விடுமுறை நாட்கள், ஆயுத பூஜை விடுமுறை நாட்கள் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் குறையவில்லை.
படம் வெளியான ஐந்து நாட்களில் இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முன்பு விஜய் நடித்து வெளிவந்த 'சர்க்கார், பிகில்' ஆகிய படங்கள் ஒரு வாரத்தில் அந்த சாதனையை நிகழ்த்தியிருந்தன. ஆனால், 'பொன்னியின் செல்வன்' படம் ஐந்தே நாட்களில் ரூ.100 கோடியைக் கடந்து தியேட்டர்காரர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், இந்திய அளவில் இப்படம் 170 கோடி வரை வசூலித்திருப்பதாகச் சொல்கிறார்கள். உலகம் முழுவதும் வசூல் கடந்த ஐந்து நாட்களில் ரூ.300 கோடியைக் கடந்திருக்கும் என்றும் இந்த வார இறுதிக்குள் ரூ.500 கோடியைக் கடக்கும் என்றும் மேலும் தெரிவிக்கிறார்கள்.