அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தின் அடுத்த மைல்கல்லாக இன்னொரு சர்வதேச அங்கீகாரமும் கிடைக்கவிருக்கிறது. அக்டோபர் 5 முதல் 14ம் தேதி வரை தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் புகழ்பெற்ற பூசான் சர்வதேசத் திரைப்பட விழாவில் விக்ரம் திரையிடப்படுகிறது. வணிக மற்றும் கலைப் படங்களின் சரியான கலவையாக அமைந்திருக்கும் சர்வதேசப் புகழ்பெற்ற திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாகச் செயல்படும் 'ஓப்பன் சினிமா' என்ற பிரிவில் விக்ரம் திரையிடப்படுகிறது.