'கைதி 2'க்கு முன்பாக உருவாகும் 'மார்ஷல்' | ‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? |
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விக்ரம். இதையடுத்து ஹிந்தியில் அலாவுகிக் தேசாய் என்பவர் இயக்கும் சீதா என்ற ராமாயண கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்கப் போகிறார் விக்ரம். இந்த படத்தில் சீதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கிறார்.
பொன்னியின் செல்வன் படத்தைப் போலவே இந்த படமும் சரித்திர கதையில் உருவாகிறது. இதில் விக்ரம் எந்த மாதிரியான கேரக்டரில் நடிக்கிறார் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மேலும் இந்த படத்திற்கு ராஜமவுலியின் பிரமாண்ட படங்களுக்கு கதை வசனம் எழுதிய அவரது தந்தை விஜயேந்திர பிரசாத் கதை வசனம் எழுதுகிறார்.
இதற்கு முன்பு டேவிட் என்ற படத்தில் ஹிந்தியில் நடித்திருக்கிறார் விக்ரம். அதுமட்டுமின்றி தமிழில் அவர் நடித்த கந்தசாமி, இருமுகன், தாண்டவம், ஐ, காதல் சடுகுடு, 10 எண்றதுக்குள்ள, கிங், பீமா, மஜா, சாமி, அருள், அந்நியன், தில் என பல படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.