அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தமிழில் மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படம் விக்ரம் வேதா. இந்த படம் தற்போது அதே பெயரில் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு கடந்த 30 ஆம் தேதி திரைக்கு வந்துள்ளது. ஹிருத்திக் ரோஷன், சையூப் அலிகான் இணைந்து நடித்துள்ள இந்த படத்தையும் தமிழில் விக்ரம் வேதாவை இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்கி உள்ளார்கள். இந்த படம் கடந்த மூன்று தினங்களில் ரூ.40 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், விக்ரம் வேதா படத்தில் நடித்தது திருப்தியாக உள்ளது. ரசிகர்களும் இந்த படத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதையடுத்து பைட்டர் என்ற படத்தில் தீபிகா படுகோனேவுடன் இணைந்து நடிக்கிறேன். இந்த படமும் விக்ரம் வேதா படத்தைப் போலவே அழுத்தமான கதையில் உருவாகி வருகிறது என்று கூறியுள்ள ஹிருத்திக் ரோஷன், இனிமேல் இதுபோன்று அழுத்தமான கதைகள் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன். வலுவில்லாத கதைகளில் நடிக்க மாட்டேன். அதனால் இனிமேல் நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தக்கூடிய படங்களாக இருக்கும் என்று தெரிவித்திருக்கிறார் ஹிருத்திக் ரோஷன்.