அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
தெலுங்குத் திரையுலகில் எவர் கிரீன் இளமை நாயகனாக இருப்பவர் நாகார்ஜுனா. 30 வருடங்களுக்கு முன்பு அவர் நடித்து தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்த 'இதயத்தைத் திருடாதே, உதயம்' ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. அதற்குப் பிறகு நேரடியாக 'ரட்சகன், பயணம், தோழா' ஆகிய படங்களில் நடித்தார்.
தற்போது தெலுங்கில் அவர் நடித்துள்ள 'த கோஸ்ட்' படம் 'இரட்சன்' என்ற பெயரில் டப்பிங் ஆகி நாளை மறுநாள் அக்டோபர் 5ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா, “சென்னையில் பிறந்து படித்து வளர்ந்தவன் நான். கிண்டியில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில்தான் படித்தேன். சென்னைத் தெருக்கள் எல்லாம் நன்கு தெரியும்,” என்று குறிப்பிட்டார்.
அவருக்கு முன்னதாகப் பேசிய இயக்குனர் பிரவீன் சத்தரு, “சென்னை, தாம்பரம் அருகே உள்ள சேலையூரில் உள்ள இஞ்சினியரிங் கல்லூரியில் படித்தேன்,” என சென்னைக்கும் தனக்குமான தொடர்பு பற்றி பேசினார்.
சென்னையில் இஞ்சினியரிங் முடித்த இவர்கள் இருவரும் இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளார்கள். சென்னையில் அத்தனை ஆண்டுகள் இருந்தும் இருவரும் நிகழ்ச்சி மேடையில் தமிழில் பேசாமல் ஆங்கிலத்தில்தான் பேசினார்கள். தவறாகப் பேசிவிடக் கூடாது என்பதுதான் காரணம் என்றார்கள்.